தன்பாலின திருமணங்களை சட்டப்பூர்வமாக்க முயற்சி: கர்தினால்
இலங்கையில் சில அமைப்புகள் தன்பாலின திருமணங்களை சட்டப்பூர்வமாக்க முயற்சிப்பதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்தகைய திருமணங்கள் மனித உரிமை அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேருவளை புனித அன்னம்மாள் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
தன்பாலின திருமணங்கள்
உலகின் பிற நாடுகளில் இதுபோன்ற திருமணங்கள் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
ஆண்களுக்கும் ஆண்களுக்கும் இடையிலான, பெண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான இத்தகைய திருமணங்களால் மனித இனத்தை விருத்தி செய்ய முடியாது.
இந்த கலாசாரம் இலங்கையில் ஊடுருவதால் இலங்கையின் விவாக கட்டமைப்பு சீர்குலையும்.
இத்தகைய திருமணங்களை சில அமைப்புகள் மனித உரிமைகள் என கூறினாலும், இதனை ஒரு மனித உரிமையாக ஏற்கமுடியாது என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 1 மணி நேரம் முன்

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
