அல்லைப்பிட்டியில் எரிந்த நிலையில் வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்பு!

Jaffna Northern Province of Sri Lanka
By Theepan Jul 27, 2025 03:48 PM GMT
Report

அல்லைப்பிட்டி பகுதியில் எரிந்த நிலையில் வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலமானது  இன்று (27) முற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

3 ஆம் வட்டாரம் அல்லைப்பிட்டி வெண்புறவியைச் சேர்ந்த 84 வயதுடைய மணியாஸ் சேவியர் என்ற வயோதிபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழில் முன்னாள் பெண் போராளி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

யாழில் முன்னாள் பெண் போராளி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

உயிரிழப்பு

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் - வயோதிபர் வாழ்ந்த வீட்டில் இருந்து புகை வெளிவருவதை வீதியால் சென்ற அவரது உறவினர் அவதானித்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது குறித்த விபரீதத்தை அவர் கண்டுள்ளார்.

உடனடியாக ஊரவர்களை அழைத்து குறித்த முதியவரை மீட்க முயற்சித்துள்ளார். அனாலும் குறித்த முதியவர் தீயில் கருகி ஏற்கனவே இறந்துள்ளார்.

அல்லைப்பிட்டியில் எரிந்த நிலையில் வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்பு! | Elderly Man S Body Recovered Allaipiddy

இந்தநிலையில் சம்பவம் தொடர்பில் கிராமசேவகர் மற்றும் பொலிசாருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு தீவகப்பகுதி மரணவிசாரணை அதிகாரி என். தியாகராசா சென்று பார்வையிட்டு சடலத்தை மீட்கப்பட்டு பொலிசாரின் ஒத்துழைப்புடன் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறையில் முக்கிய கைதிகள் உள்ள பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சாதனங்கள்

வெலிக்கடை சிறையில் முக்கிய கைதிகள் உள்ள பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சாதனங்கள்

மேலதிக விசாரணைகள்

கடந்த சில மாதங்களாக குறித்த முதியவர் நடக்க முடியாத நிலையில் தனது வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார்.

அல்லைப்பிட்டியில் எரிந்த நிலையில் வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்பு! | Elderly Man S Body Recovered Allaipiddy

புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்ட குறித்த முதியவர் பாவித்த பீடியின் மூலம் அவர் உறங்கும் மெத்தையில் ஏற்பட்ட தீயின் காரணமாகவே இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்  ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொட்டகலை- ரொசிட்ட பகுதியிலுள்ள ஆற்றிலிருந்து சிறுமி ஒருவர் சடலமாக மீட்பு

கொட்டகலை- ரொசிட்ட பகுதியிலுள்ள ஆற்றிலிருந்து சிறுமி ஒருவர் சடலமாக மீட்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US