கொழும்பில் வாகனங்களை கடத்தும் மோசடி கும்பல்: விசாரணையில் வெளியான தகவல்
கொழும்பில் வாடகை அடிப்படையில் வாகனங்களை எடுத்துச்சென்று விற்பனை செய்யும் மோசடி கும்பல் குறித்த தகவல்களை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
அதன்படி, கடத்தலில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஓகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி இரு நபர்கள் வாடகை அடிப்படையில் வாகனத்தினை பெற்று வாகன சாரதிக்கு போதையில் மயக்க மருந்தினை கொடுத்து துப்பாக்கியை காட்டி மிரட்டி மோட்டார் வாகனத்தினை கடத்திச்சென்றுள்ளனர்.
சந்தேகநபர்கள் கைது
சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், சந்தேகநபர்கள் இருவரும் கடவத்தை பகுதியில் வாடகை அடிப்படையில் வாகனத்தினை எடுத்துச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
இதற்கமைய தொடர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் சந்தேகநபர்களை அடையாளம் கண்டு ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளனர்.
வாகனம் விற்பனை
இதன்போது வாகனம் வேறொரு இடத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், வாகனத்தினை வாங்கியவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கமைய, சந்தேகநபர்கள் இதுபோன்ற பல குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன்,மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |