திருகோணமலையில் அதிகாலை வேளையில் நடந்த கார் விபத்து: உயிர்தப்பிய சாரதி
திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கார் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து நேற்று(08.03.2026) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சாரதி சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். திருகோணமலையிலிருந்து வாழைச்சேனை நோக்கிப்பயணித்துக் கொண்டிருந்த கார், வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
கார் விபத்தில் சாரதி படுகாயம்
கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த மின் கம்பத்துடன் மோதியதில் மின் கம்பம் பலத்த சேதமடைந்துள்ளது. விபத்தில் காயமடைந்த கார் சாரதி, உடனடியாக மீட்கப்பட்டு ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு உடலில் சிறு காயங்கள் மாத்திரமே ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன், மின் கம்பம் சேதமடைந்ததால் மின்சார விநியோகத்திலும் தடை ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து ஈச்சிலம்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கை அருகே ஈரான் கப்பல் தாக்கப்படுவதற்கு முன்னர் அமெரிக்க படைகளால் இரட்டை எச்சரிக்கைகள்! வெளியான அதிர்ச்சி தகவல்
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? Manithan