பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்த கார்! மூவர் வைத்தியசாலையில்
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா - உடப்புசல்லாவ பிரதான வீதியில் பொரலந்த பகுதியில், கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (10) மாலை இடம்பெற்றுள்ளது.
கந்தபளையிலிருந்து நுவரெலியாவை நோக்கி பயணித்த காரொன்ரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
பலத்த சேதம்
பலத்த மழையுடன் கூடிய காலநிலை காரணமாக கார் வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியிலிருந்து தேயிலை தோட்டத்தில் சுமார் 50 மீட்டர் அடி பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, காரில் பயணித்த 03 பேர் பலத்த காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தினால் கார் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிரு்நத நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
