வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் 220 ஆம் ஆண்டு வெற்றிநாள் நிகழ்வு (Video)
வன்னி மண்ணின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு கோட்டையினை ஆங்கிலேயரிடம் வெற்றிகொண்டதன் 220 ஆவது ஆண்டுவிழா முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் கற்சிலைமடு கிராமத்தில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் சிலையடியில் இன்று (25.08.2023) நடைபெற்றது.
இதன்போது பண்டாரவன்னியன் சிலைக்கு மலர்மாலை அணிவித்து வணக்கம்
செலுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து உருவப்படத்திற்கு மலர்தூவி வணக்கம்
செலுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட அரசாங்க அதிபரால் கௌரவிப்பு
மேலும், பண்டாரவன்னியனின் வரலாற்று கதையினை முல்லைமோடி கூத்தாக உருவாக்கம் செய்து மக்கள் மத்தியில் அறிமுகம் செய்த முதுபெரும் கலைஞர் காலாபூசணம் என்.எஸ்.மணியம் மாவட்ட அரசாங்க அதிபரால் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் வெற்றி நாள் நிகழ்வு
தேசியவீரன் மாவீரன் பண்டாரவன்னியனின் 220வது ஞாபகார்த்த விழா இன்று (25/08/2023) காலை 09.30 க்கு வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன் அமைந்துள்ள பண்டாரவன்னியன் சதுக்கத்தில் இடம்பெற்றது.
இதன்போது பண்டாரவன்னியனின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், அவர் தொடர்பான சிறப்புரைகளும் இடம்பெற்றிருந்தது.
வவுனியா நகரசபைசெயலாளர் பூ. செந்தில்நாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் பி. ஏ. சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி. திரேஸ்குமார், முன்னாள் உள்ளூராட்சிமன்ற தலைவர்களான இ.கௌதமன், சு. ஜெகதீஸ்வரன், மற்றும் முன்னாள் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
செய்தி- திலீபன்

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 7 மணி நேரம் முன்

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam
