இனவாதிகளினால் கட்சியை விட்டு வெளியேறினேன் : சரத் அமுனுகம
இனவாதிகளினால் கட்சியை விட்டு வெளியேறியதாக மவ்பிம ஜனதா கட்சியின் தவிசாளர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
தமது அரசியல் வாழ்க்கையில் கடும்போக்குவாதிகள் மற்றும் இனவாதிகளுடன் இணைந்து செயற்பட்டதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கட்சிக்குள் இனவாதிகள் இணைந்து கொண்டதனால் தாம் அனைத்து பதவிகளிலிருந்தும் விலகிக் கொண்டதாகத் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்தர்ப்பவாதம் மற்றும் மக்களை திசை திருப்புவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவிததுள்ளார்.
கடும்போக்குவாதம்
மவ்பிம ஜனதா கட்சியின் ஊடாக தற்போதைய இளைஞர்களை கவர்ந்து மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்ட பயணமொன்றை முன்னெடுக்க முடியும் என கருதியதாகத் தெரிவித்துள்ளார்.
இனவாதம் மற்றும் கடும்போக்குவாதத்தை அன்று போலவே இன்றும் எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தேசப்பற்றுக்கும் இனவாதத்திற்கும் இடையில் வேறுபாடு உண்டு என்பதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் விமல் வீரவன்ச, பிவித்துரு ஹேல உறுமயவின் உதய கம்மன்பில போன்றவர்களுடன் கூட்டணி பேணுவதனை தாம் எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நபர்களுடன் இணைந்து கொண்டவர்களுக்கு கடந்த காலங்களில் எவ்வாறான ஓர் நிலைமை ஏற்பட்டது என்பது குறித்து பல உதாரணங்களை கூற முடியும் எனவும் இவ்வாறான நபர்களுடன் கூட்டணி சேர்வது குறித்து ஒரு தடவை அல்ல பல தடவைகள் சிந்திக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |