சாரா உயிரிழப்பு தொடர்பில் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளும் அறிக்கை வேண்டும் என கோரிக்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையதாக கூறப்படும் புலஸ்தினி மகேந்திரன் என்ற சாரா ஜெஸ்மின் உயிரிழந்துள்ளதாக கூறப்படுவது குறித்து சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
சாரா கொல்லப்பட்டதாக அறிக்கை

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின் சாய்ந்தமருதுவில் இடம்பெற்ற தற்கொலை சம்பவத்தில் சாரா கொல்லப்பட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் பொலிஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
எனினும் அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் மூன்றாவது அறிக்கை, அந்த திணைக்களத்தின் முன்னைய அறிக்கைகளுக்கு முரணானது என்பதை சிறில் காமினி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்றுக்கொள்ள முடியாது என அறிவிப்பு

எனவே, இதனை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என சிறில் காமினி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தாக்குதலின் பின்னர் சாரா ஜெஸ்மின் இந்தியாவுக்கு தப்பிச்சென்று
விட்டதாக இதுவரை சந்தேகிக்கப்பட்ட நிலையிலேயே அவர் இறந்துவிட்ட செய்தி
வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam