பிரதி சபாநாயகரின் காணியில் கஞ்சா தோட்டம்: விசேட அதிரடிப்படை சுற்றிவளைப்பு- செய்திகளின் தொகுப்பு (Video)
பிரதி சபாநாயகர் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்சவின் காணியில் வாடகைக்கு அமர்த்தப்பட்ட நபரொருவர் கஞ்சா தோட்டத்தை நடத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதி சபாநாயகருக்கு சொந்தமானதாக கூறப்படும் மத்தல பெப்பர்கமத்த பிரதேசத்தில் அமைந்துள்ள 50 ஏக்கர் காணியில் சுமார் 10 ஏக்கர் சூரியவெவ பிரதேச சந்தேக நபருக்கு வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,
