யாழில் பெருந்தொகையான கஞ்சாவுடன் படகொன்று மீட்பு
யாழ்ப்பாணத்தில் 192 கிலோ கஞ்சாவுடன் படகொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மண்டைதீவு கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் படகொன்று காணப்படுவதாக கடற்படையினருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த கடற்படையினர் , படகினை கைப்பற்றியுள்ளனர் குறித்த படகினுள் , பெருந்தொகையான கஞ்சா காணப்பட்டதை அடுத்து , படகினை கரைக்கு கொண்டு வந்து , படகில் இருந்த பெருந்தொகையான கஞ்சாவை மீட்டுள்ளனர்.
விசாரணை
அதனை அடுத்து மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் படகினை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்படையினர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதனை தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நாச்சிக்குடா பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நபரை கைது செய்துள்ளனர்.

ரஜினி சார் மீது இருக்கும் மரியாதைக்காக ஒதுங்குகிறேன்.. தனுஷ் ஓம் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு Cineulagam