மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் முதன்முறையாக சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சை பிரிவு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் முதன்முறையாக சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சை பிரிவு புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தச் சிறப்புப் பிரிவை அமைப்பதற்காகப் பல மருத்துவ நிபுணர்களும், வைத்தியசாலையின் அனைத்து ஊழியர்களும் தங்களது முழுமையான ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வழங்கியுள்ளனர்.
அதிதீவிர சிகிச்சை பிரிவு
மாவட்ட அளவிலும் மாகாண அளவிலும் தீவிர நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் சிறுவர்களுக்குத் தனித்துவமான மற்றும் உயர்தர அதிதீவிர சிகிச்சைகளை இதன் மூலம் வழங்கும் வகையில் இந்த பிரிவு திறந்துவைக்கப்பட்டுள்ளது.

சிறுவர் நல மருத்துவச் சிகிச்சையில் இதுவொரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
வைத்தியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்களின் முழுமையான ஒத்துழைப்புடன் இந்தச் சேவை திறம்படச் செயற்படுத்தப்படும் என்றும், எதிர்காலத்தில் வைத்தியசாலையில் மேலும் பல புதிய மருத்துவப் பிரிவுகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் தெரிவித்தார்.







பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட லட்சுமி ப்ரியா... காரணம் என்ன, ஷாக்கில் ரசிகர்கள் Cineulagam
ரஜினி சார் மீது இருக்கும் மரியாதைக்காக ஒதுங்குகிறேன்.. தனுஷ் ஓம் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு Cineulagam