கஞ்சா இலங்கையின் கலாசாரம்-ராஜித சேனாரத்ன
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் 2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பல யோசனைகள் சிறந்த யோசனைகள் என ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பிரதமராக நிறைவேற்ற முடியாமல் போனதை ஜனாதிபதியாக நிறைவேற்ற முயற்சி

பின்தங்கிய பாடசாலைகளுக்கு கணனி இணைய வசதிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமராக இருந்த போது நிறைவேற்ற முடியாமல் போனது.
எனினும் ஜனாதிபதியாக அவர் இதனை மீண்டும் நடைமுறைப்படுத் முயற்சித்துள்ளமை சிறந்த விடயம். அன்று பின்தங்கிய பாடசாலைகளுக்கு கணனி இணைய வசதிகளை வழங்கியிருந்தால், கோவிட் காலத்தில் மாணவர்கள் சிறப்பாக கல்வி கற்றிருப்பார்கள்.
வெள்ளையர்கள் கஞ்சாவை இல்லாதொழித்தனர்

த்ரைலோக விஜய பத்ர (கஞ்சா) ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கியமையும் சிறந்தது. கஞ்சா இலங்கையின் கலாசாரம். வெள்ளையர்கள் புகையிலை அறிமுகம் செய்து, கஞ்சாவை இல்லாதொழித்தனர்.
புகையிலை எவரும் பயன்படுத்தவில்லை என்பதால், வெள்ளையர்கள் கஞ்சாவை தடை செய்தனர். கஞ்சாவில் மருந்துகளை தயாரித்து ஏற்றுமதி செய்யலாம். இதன் மூலம் வருடாந்தம் பெரும் வருவாயை ஈட்ட முடியும் எனவும் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam