ஜனாதிபதி ரணிலுக்கு மக்கள் ஆசிர்வாதம் இல்லை - ராஜித சேனாரத்ன
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்திற்குள் கொண்டு வரும் நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அனைத்துக் கட்சி ஆட்சி அமைக்கும் நோக்கில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சர்வகட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கான மக்களின் ஆசிர்வாதம் இல்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அனைத்துக் கட்சி ஆட்சி அமைக்கும் போது, அதன் வேர் மக்கள் சார்புடையதாக இருக்க வேண்டும், அந்த வேர் மக்கள் விரோதமாக இருந்தால், அதில் சேரும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்கள் விரோதிகளாவர்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri