தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளருக்கு எதிராக வேட்பாளர்கள் முறைப்பாடு
யாழ்.வடமராட்சி கிழக்கு தேசிய மக்கள் சக்தியின் உள்ளுராட்சி சபை வேட்பாளர்களிடையே குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, கடற்தொழில் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன்,ரஜீவன் ஆகியோருக்கு வேட்பாளர்களால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடமராட்சி, கிழக்கில் அபிவிருத்தி திட்டங்களை கருத்தில் கொண்டு மாடசாமி செல்வராசாவை(ஷாம்) வடமராட்சி கிழக்கு பிரதேச சபை உறுப்பினராக நியமித்து உள்ளீர்கள்.
முறைப்பாடு
எமது பிரதேசங்களில் அவரது செயற்பாடு எந்த வகையிலும் இல்லை. கல்வியறிவு குறைந்த நிலையில் இருப்பவரை குறிப்பாக எழுத வாசிக்க தெரியாத ஒருவரை அமைப்பாளராக நியமித்து திரும்பவும் வேறொரு பதவியை கொடுப்பது கட்சி சார்ந்து வடமராட்சி கிழக்கு வேட்பாளர்களாகிய நாம் நிராகரிக்கிறோம்.
எமது வேட்பாளர்களின் விருப்பத்திற்கு அமைய நாம் அனைவரும் ஒன்று கூடி ஒரு வேட்பாளரை தெரிவு செய்கிறோம். நாங்கள் தெரிவு செய்யும் அந்த தகுதியுடைய நபரை நியமிக்குமாறு உங்களை கேட்டுக் கொள்கிறோம் என்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
