யாழ். தேர்தல் மாவட்டத்தில் ஆறு ஆசனங்களையும் கைப்பற்றுவோம்: வைத்தியர் அர்ச்சுனா உறுதி
யாழ். தேர்தல் மாவட்டத்தில் ஆறு ஆசனங்களையும் நாங்கள் பெற்றுக்கொள்வோம் என பொது தேர்தல் வேட்பாளர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற வேட்பாளர் அறிமுகம் நிகழ்வில் உரையாற்றும் போதே அவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், “எங்களுடைய அரசியல் பயணம் ஏழைகளுக்கான அரசியல் பயணமாக இருக்கும்.
மக்களின் ஆளுமை
மக்களின் தேவைக்காக ஆளுமை மிக்கவர்களை ஒன்றிணைந்து , பாதை மாறி போகும் தமிழ் தேசியத்தை சரியான பாதைக்கு கொண்டு வருவோம்.
தமிழ் தேசியம் பேசும் போலி தேசியவாதிகளை இனம் கண்டு உள்ளோம். அதனால் சமூக பொறுப்புள்ள துடிப்புள்ள இளையோரை நாடாளுமன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.
எனவே தமிழ் மக்கள் மிக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் எமது போராட்டம் அரசியல் சார்பற்ற போராட்டமாக முன்னெடுத்தோம்.” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 22 மணி நேரம் முன்

மகனையே கொடூரமாக மிரட்டும் ஆதி குணசேகரன், பெண்கள் திட்டம் நடக்குமா! எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam

இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் கெட்ட செய்தி - இராணுவ சக்தியை மீண்டும் கட்டியெழுப்பிய ஈரான் News Lankasri
