நீரிழிவு நோயாளிக்கு புற்றுநோய் மருந்தை மாற்றி வழங்கிய தனியார் மருந்தகம் - இறுதியில் நடந்த துயரம்
ஹொரணை - இங்கிரி பிரதேசத்தில் இங்கிரியில் உள்ள தனியார் மருந்தகம் ஒன்றில் தவறுதலாக வழங்கப்பட்ட மருந்தை பயன்படுத்திய பெண் ஒருவர் சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு புற்றுநோயாளிகளுக்காக மருந்தினை மருந்தகம் மருந்துகளை வழங்கியதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இங்கிரிய மேல் ஊராகல பிரதேசத்தில் வசித்து வந்த அறுபத்திரண்டு வயதான பி.எம்.சோமாவதி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் அவதிப்பட்டு வந்த அவர், ஹொரணை ஆதார வைத்தியசாலையின் கிளினிக்கில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அதன்படி, கடந்த 31ம் திகதி அவரது கணவர் தேவையான தனியார் மருந்தகத்தில் வாங்கிச் சொன்றுள்ளார்.
அதன்படி இங்கிரியில் உள்ள தனியார் மருந்தகத்தில் இருந்து பெறப்பட்ட மருந்துகளை சுமார் ஒருவாரம் பயன்படுத்திய போது சோமாவதி சில சிரமங்களை அனுபவித்து உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் இங்கிரிய பொலிஸில் முறைப்பாடு செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



