உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இரத்து
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை ரத்து செய்வதற்கு உள்ளூராட்சி அலுவல்கள் தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு ஏகமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு வேட்புமனுக்களை சமர்ப்பித்த வேட்பாளர்கள், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாமையால் பல அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இரத்துச் செய்ய சம்மதம்
இந்தநிலையில், வேட்பு மனுக்களை இரத்துச் செய்ய அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு கூட்டத்தின் போது ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரும் பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுவில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri
டன் கணக்கிலானத் தங்கத்தை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றும் ஐரோப்பிய நாடுகள்: என்ன காரணம் News Lankasri