யாழ்ப்பாணம் வந்திறங்கிய இந்தியப்படை : இடைமறித்த ஈழத்தமிழர்கள் (Video)
இந்தியாவின் செஹந்திராபாத் இராணுவத் தளத்தில் இருந்து புறப்பட்ட இந்தியப் படையின் ஒரு படைப்பிரிவு 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30ஆம் திகதியன்று இலங்கையை வந்தடைந்தது.
இந்திய இராணுவத்தின் சில முக்கிய படையணிகள் இந்த முதலாவது தரையிறக்கத்தின் மூலம் தரையிறக்கப்படடனர்.
இந்தியாவின் 24ஆவது காலாட் படை பிரிவு, 340ஆவது காலாட் படை பிரிவு, பிராந்திய ரிசர்வ் படைப் பிரிவினர் 65ஆவது கவச வாகனப் பிரிவினர், 91ஆவது காலாட் படைப் பிரிவு, ஐந்தாவது மட்ராஸ் ரெஜிமென்ட் உள்ளிட்ட மேலும் சில படைப்பிரிவுகள் முதற்கட்டமாக தரையிறக்கப்பட்டனர்.
இந்த படைப்பிரிவுகளின் விமானம் மூலமான தரையிறக்கம் பலாலி விமான நிலையத்திலும், கப்பல் மூலமான தரையிறக்கம் காங்கேசன்துறை துறைமுகத்திலும் இடம்பெற்றன.
2ஆம் உலகப் போருக்கு பிறகு இந்தியப் படைகள் மேற்கொண்ட மிகப் பெரிய தரையிறக்கம் என்று போரியல் ஆய்வாளர்களால் வர்ணிக்கப்பட்ட இந்த தரையிறக்கத்தை இந்தியா தனது இராணுவ பலத்தை பரீட்சித்துப் பார்க்கும் ஒரு நடவடிக்கையாகவும் திட்டமிட்டிருந்தது...
இதன் முழுமையான விபரங்களை கொண்டு வருகின்றது கீழ்வரும் உண்மையின் தரிசனம் சிறப்புக் காணொளி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |