வவுனியாவில் மூன்று தனியார் பேருந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரம் இரத்து
வவுனியாவிலிருந்து சேவையில் ஈடுபடும் மூன்று தனியார் பேருந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், அவை சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.
வீதியில் போட்டித்தன்மை
மூன்றுக்கு மேற்பட்ட விபத்துக்களை ஏற்படுத்தியமை, வீதியில் போட்டித்தன்மையில் பயணித்தமை போன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இவ் பேருந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் இச் செயற்பாடு மக்கள் மத்தியின் பாரிய வரவேற்பினை பெற்றுள்ளமையுடன் தொடர்ந்தும் பயணிகளின் சுதந்திரமான பயணத்திற்கு இடையூறு விளைவிக்கும் பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கையினை முன்னெடுக்குமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri