அனைத்து தபால் ஊழியர்களுக்குமான விடுமுறைகள் இரத்து!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிறைவடையும் வரை அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று (06) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் விடுமுறைகள் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க (R.M.A.L. Rathnayake) தெரிவித்துள்ளார்.
தபால் மூல வாக்குப்பதிவு
இந்த நிலையில், உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாலேயே விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி தபால் நிலையத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன், ஏப்ரல் 20 ஆம் திகதி விசேட வாக்காளர் அட்டை விநியோக நாளாகக் கருதப்படும்.
மேலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் நடைபெற உள்ளது.
குறித்த நாட்களில் வாக்களிக்க முடியாத அரச பணியாளர்களுக்காக ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகிய திகதி மேலதிக நாட்களாக ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 8 மணி நேரம் முன்

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri
