யாழில் வைத்திய அதிகாரியின் இடமாற்றத்தை இரத்துச் செய்யக் கோரும் மக்கள்

Jaffna Hospitals in Sri Lanka Northern Province of Sri Lanka
By Kajinthan Dec 23, 2024 03:13 PM GMT
Report

யாழ்ப்பாணம் (Jaffna) -வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி செந்தூரனின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரி விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது இன்று (23) வைத்தியசாலையில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பவானந்தராஜாவுக்கும் நோயாளர் நலன்புரிச் சங்கத்தினருக்கும் மற்றும் சமூகமட்ட அமைப்பினருக்கும் இடையில் நடைபெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலின்போது மக்கள் கருத்து தெரிவிக்கையில், குறித்த வைத்தியசாலை பிரதேச வைத்தியசாலை தரத்தில் காணப்படுன்றது. ஆனால் அதற்குரிய ஆளணி வசதிகள் காணப்படுவதில்லை. இருப்பினும் கட்டட வசதிகள் தாராளமாக உள்ளன.

யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி

யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி

மருத்துவ வசதி

கடந்த காலங்களில் 24 மணிநேர மருத்துவ வசதிகளும், சிகிச்சைகளும் காணப்பட்டன. ஆனால் பின்னர் அவை எல்லாம் இடைநிறுத்தப்பட்டன.

யாழில் வைத்திய அதிகாரியின் இடமாற்றத்தை இரத்துச் செய்யக் கோரும் மக்கள் | Cancel Transfer Of Medical Officer In Jaffna

இருப்பினும் தற்போது கடமையில் இருக்கின்ற பொறுப்பு வைத்திய அதிகாரி செந்தூரனின் முயற்சியாலேயே மீண்டும் நோயாளர் விடுதி இயக்கப்படுகின்றது. இந்த வைத்தியசாலையை பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர்.

24 மணிநேர மருத்துவ வசதி இல்லாத காரணத்தால் மக்கள் யாழ். போதனா வைத்தியசாலைக்கும், சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கும் செல்ல வேண்டி ஏற்படுகிறது. அந்த வைத்தியசாலைகளில் விடுதிகளில் கட்டில் தட்டுப்பாடுகள், இடவசதி பிரச்சினைகள் காணப்படுகின்றன.

இவ்வாறான சூழ்நிலையில் எங்களது வைத்தியசாலையில் 24 மணிநேர மருத்துவ சேவையை ஆரம்பித்தால் மக்கள் அலைச்சல் இல்லாமல் இங்கேயே சேவையை பெற முடியும். அத்துடன் அந்த வைத்தியசாலைக்கும் வேலைச்சுமை குறையும்.

சக்திவாய்ந்த புதையல் தோண்டும் இயந்திரத்தைக் கைவிட்டுத் தப்பிச் சென்ற கும்பல்

சக்திவாய்ந்த புதையல் தோண்டும் இயந்திரத்தைக் கைவிட்டுத் தப்பிச் சென்ற கும்பல்

மக்கள் கோரிக்கை

புதிதாக பதவியேற்றுள்ள பொறுப்பு வைத்திய அதிகாரி எமது வைத்தியசாலைக்கு வருகை தந்து ஒன்றரை வருடங்களே ஆகின்றன. ஆனால் அவர் அந்த காலப்பகுதிக்குள் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டுள்ளார்.இன்னும் சிறிது காலம் அவர் எமது வைத்தியசாலையில் வேலை செய்தால், எமது வைத்தியசாலையின் சேவைகளை முழுமைப்படுத்தி விடுவார்.

யாழில் வைத்திய அதிகாரியின் இடமாற்றத்தை இரத்துச் செய்யக் கோரும் மக்கள் | Cancel Transfer Of Medical Officer In Jaffna

அதன்பின்னர் யார் வைத்திய பொறுப்பதிகாரியாக வந்தாலும் அந்த சேவைகளை இலகுவாக முன்னெடுத்துச் செல்ல முடியும். மக்களுக்கு சேவை செய்வதற்கே அனைத்து அரச திணைக்களங்களும், அரச அதிகாரிகளும் உள்ளனர்.

எனவே மக்களாகிய எமது கோரிக்கைகளை செவிமடுத்து எமது வைத்தியசாலையின் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும் முகமாக குறித்த வைத்திய அதிகாரியின் இடமாற்றத்தை இடைநிறுத்தி அல்லது தள்ளிப்போட்டு மக்களது நலனிலும் வைத்தியசாலையின் வளர்ச்சியிலும் அக்கறை செலுத்த வேண்டும் என்றனர்.

அத்துடன் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரையும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கையளித்தனர்.

மக்களின் கோரிக்கைகளை செவிமடுத்து நாடாளுமன்ற உறுப்பினர், அவர்களது கோரிக்கை தொடர்பாக உரிய தரப்பினருடன் கலந்தாலோசிப்பதாக உறுதியளித்துள்ளார். 

புதிய சாதனை படைத்த கொழும்பு பங்குச் சந்தை

புதிய சாதனை படைத்த கொழும்பு பங்குச் சந்தை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US