நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன இறக்குமதிக்கான முடிவு ரத்து
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆடம்பர வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான முடிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனை அமைச்சரவை இணை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று தெரிவித்துள்ளார்.
வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான உத்தரவை ரத்து செய்ய அமைச்சரவையால் கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடன் கடிதத்தில் ஏற்கனவே கையெழுத்திடப்பட்டு வழங்கப்பட்டதன் காரணமாக, இந்த உத்தரவை ரத்து செய்வதற்கான செயல்முறையில் சிறிது காலம் எடுத்தது என்று ரம்புக்வெல்ல கூறினார்.
இருப்பினும், இந்த விவகாரம் தீர்க்கப்பட்டு வாகனக்கொள்வனவு ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயத்தை ரத்து செய்ய அரசாங்கம் முடிவு செய்த போதிலும், எதிர்க்கட்சி இந்த பிரச்சினையில் இருந்து ஒரு நாடகத்தை உருவாக்கி வருகிறது என்று அவர் கூறினார்.
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri