ஆன்லைனில் மதுபானம் விற்பனை செய்வதற்கான அனுமதி ரத்து! - அரசாங்கம் திடீர் நடவடிக்கை
இணைய வழியாக மதுபானம் விற்பனை செய்யும் நடைமுறைக்கு அனுமதி வழங்கப் போவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாடு முழுவதிலும் பயணத்தடை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இணைய வழியாக மதுபான வகைகளை விற்பனை செய்யும் யோசனைத் திட்டமொன்று முன்வைக்கப்பட்டது.
இந்த யோசனைக்கு நிதி அமைச்சு அனுமதி வழங்கியிருந்ததாக இன்றைய தினம் செய்திகள் வெளியாகிருந்தன.
எவ்வாறெனினும் கோவிட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் பயணத்தடை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இணைய வழியாக மதுபானம் விற்பனை செய்வது பொருத்தமற்றது என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட சில தரப்புக்கள் சுட்டிக்காட்டியிருந்தன.
இந்த நிலையில், இணைய வழியாக மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கப் போவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 2 நாட்கள் முன்
ரஜினி வீட்டில் பொங்கல்.. ப்ளேட்டை ஸ்பூனால் தட்டி கொண்டாடிய சூப்பர்ஸ்டார்! வீடியோவை பாருங்க Cineulagam
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப்போர்க்கால குண்டுகள்: 5,000 பேர் வெளியேற்றம் News Lankasri