ஆன்லைனில் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி
ஆன்லைனில் மதுபான வகைகளை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி பல்பொருள் அங்காடிகளில் ஆன்லைனில் மதுபான வகைகளை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் இவ்வாறு இணைய வழியாக மதுபானங்களை விற்பனை செய்வதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு நிதி அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், நிதி அமைச்சினால் ஆன்லைனில் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்ட போதிலும் கோவிட் ஒழிப்பு விசேட செயலணி மதுபான வகைகளை ஆன்லைனில் விற்பனை செய்ய இதுவரையில் அனுமுதி வழங்கவில்லை என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பயணத்தடை காலத்தில் இவ்வாறு ஆன்லைனில் மதுபான வகைகளை விற்பனை செய்யக் கூடாது என இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
வெள்ளையர்கள்தான் பிரித்தானிய குடிமக்கள்... பிரித்தானியாவில் அதிகரித்துவரும் வலதுசாரிக் கொள்கைகள் News Lankasri
கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கெய்ர் ஸ்டார்மர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படுவது உறுதி: கடுமையாகத் தாக்கிய பிரபலம் News Lankasri