இலங்கை இராணுவத்திற்கு எதிராக கனேடிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முடியாது! கொந்தளிக்கும் பெண் (Video)
கனடா பிரதமர் மே 18 ஆம் திகதியை தமிழின அழிப்பு நாளாக பிரகடனப்படுத்த வேண்டும் என கூறிய கருத்தை நாங்கள் முற்றிலும் எதிர்க்கின்றோம் என தேசத்தை கட்டியெழுப்பும் நல்லிணக்கத்திற்கான இயக்கத்தின் செயலாளர் ஹாஷியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“கனடா பிரதமரின் கருத்தை நாங்கள் முற்றிலும் எதிர்கின்றோம். ஏனெனில் இலங்கையில் அவ்வாறானதொரு இன படுகொலை இடம்பெறவே இல்லை.
இடம்பெறாத ஒரு இனப்படுகொலைக்கு ஒரு நாளை ஒதுக்குவது எமக்கு பிரச்சினையாக உள்ளது.
30 ஆண்டுகளாக விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கும் குண்டு வெடிப்புகளுக்கும் எமது இலங்கை மக்கள் முகம் கொடுக்க வேண்டி இருந்தது.
அப்படியான சூழலில் இருந்து இராணுவ வீரர்கள் தான் எமது நாட்டை மீண்டும் எமக்கு கைப்பற்றி கொடுத்தார்கள்.” என கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்,





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 9 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
