அமெரிக்காவை மறைமுகமாக விமர்சனம் செய்த கனேடிய பிரதமர்
கனேடிய பிரதமர் மார்க் கார்னி அமெரிக்காவின் அண்மைக்கால செயற்பாடுகளை மறைமுகமான அடிப்படையில் கடுமையாக விமா்சனம் செய்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளிநாட்டு கொள்கை
சர்வதேச விதிமுறைகளின் அடிப்படையிலான பழைய ஒழுங்கின் வீழ்ச்சி நடுத்தர நாடுகளை ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது என தெரிவித்துள்ளார்.

இது அமெரிக்க வெளிநாட்டு கொள்கை மற்றும் பொருளாதார ரீதியாக தண்டிக்கும் வகையிலான வரிகள் பயன்படுத்துதலைத் தொடர்பாக கார்னி நுட்பமான விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.
ஒரு பெரிய சக்திகள் மோதும் காலத்தில் வாழ்கின்றோம் என தினமும் நினைவூட்டப்படுகிறோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விதிமுறைகளின் அடிப்படையிலான உலக ஒழுங்கு வீழ்ந்து வருகிறது எனவும் சக்திவாய்ந்தோர் தங்கள் விருப்பப்படி செயல் படலாம் என்ற நிலை உருவாகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பலவீனமானவர்கள் தண்டனைக்கு ஆளாக நேரிடும் நிலைமை நீடித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கவனமாக பேச்சுவார்த்தை
சில நாடுகள் அழுத்தங்களுக்கு அடிபணிந்து நிபந்தனைகளை ஏற்று பாதுகாப்பினை பெற்றுக்கொள்ள முடியும் என நம்புவதாகவும் அது நடைமுறைச் சாத்தியமில்லை எனவும் கார்னி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெயரை குறிப்பிடாமல், கார்னி பெரிய சக்திகள் பொருளாதார ஒருங்கிணைப்பை ஆயுதமாகப் பயன்படுத்த முயற்சிப்தாகவும் வரிகளை அழுத்தமாகக் கையாள முயற்சிப்பதாகவும் கார்னி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பெயரை குறிப்பிடாது இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கனடா கிரீன்லாந்தின் மீது வரிகளை கடுமையாக எதிர்க்கிறது, மற்றும் அர்க்டிக் பகுதியில் பாதுகாப்பு மற்றும் செழிப்பை உறுதிப்படுத்தும் நமது இணைந்த இலக்குகளை அடைய கவனமாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.
பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா 6 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தார்? வைரலாகும் புகைப்படம் Manithan