யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு கனேடிய உயர்ஸ்தானிகர் விஜயம்!
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டீன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.
குறித்த விஜயத்தினை அவர் நேற்றையதினம்(26.1.2026) மேற்கொண்டுள்ளார்.
கடந்த இரு நாள்களாக வடக்குக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள கனேடிய உயர்ஸ்தானிகர் நேற்று காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்து, பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
கலந்துரையாடல்
அதன் பின்னர் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், பதிவாளர், நிதியாளர், நூலகர் மற்றும் அரசறிவியல், பொருளியல் மற்றும் மொழிபெயர்ப்புக் கற்கைகள் துறைகளின் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்புகளின் போது, அரசியல் பொருளாதார நிலைமைகள் உட்பட சமகால விடயங்கள் பற்றியும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கனேடியத் தூதரக அனுசரணையுடன் மேற்கொள்ளப்படும் செயற்றிட்டங்கள் பற்றியும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 4 மணி நேரம் முன்
பிரிட்டிஷ் ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்: பின்னணியில் ரஷ்யாவின் சதியா? பிரித்தானியா சந்தேகம் News Lankasri
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam