கனடாவிலிருந்து சென்ற விமானம் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு
கனடாவின் (Canada) டொராண்டோ (Toronto) பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 389 பயணிகளுடன் பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கு சென்ற விமானத்தின் என்ஜின் தீப்பற்றியுள்ளது.
குறித்த விமானம் பறக்க தொடங்கிய சில வினாடிகளிலேயே அதன் என்ஜின் தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகளால் உடனடியாக விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு வீரர்கள்
தகவலறிந்து சாமர்த்தியமாக செயற்பட்ட விமானி, குறித்த விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளார்.
उड़ान भरते ही Air #Canada की #फ्लाइट में लगी आग, 402 यात्री थे सवार✈️#flight #travelling #travel #airoplane #airport #canada #toranato pic.twitter.com/u8WbJfxGCP
— Pawan Kumar (@PawanKumar484) June 9, 2024
அதனைத் தொடர்ந்து, அங்கு தயாராக இருந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் என்ஜின் பகுதியில் ஏற்பட்ட தீயை அணைத்துள்ளனர்.
மேலும், விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |