குற்றக்குழு தலைவரான இலங்கை தமிழரை நாடு கடத்த கனேடிய நீதிமன்றம் அனுமதி
2022ஆம் ஆண்டு பிரான்ஸின் பெரிஸ் அருகே ஒரு போட்டி குழுவின் மீது மேற்கொள்ளப்பட்ட, கொடிய தாக்குதல் ஒன்று தொடர்பில் குற்றச்சாட்டப்பட்டு, கடந்த ஆண்டு கனடா டொராண்டோவில் கைது செய்யப்பட்ட இலங்கையின் குழுத் தலைவரை நாடு கடத்த ஒன்ராறியோ நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.
தற்போது, டொராண்டோ தெற்கு தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரசன்னா நல்லலிங்கத்தின் நாடு கடத்தல், கனடாவின் நீதி அமைச்சரின் ஒப்புதலை அடுத்து மேற்கொள்ளப்படும்.
இதனையடுத்து, 30 நாட்களுக்கு பின்னர் அவர் பிரான்ஸ் நாட்டு அதிகாரிகளிடம்; சரணடைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறை வரலாறு
தகவல்களின்படி, 2022 செப்டம்பர் 21 அன்று, பிரசன்னா நல்லலிங்கம் 'AAVA' என்ற குழுவின் நான்கு உறுப்பினர்களுக்கு ஆயுதங்களை வழங்கி, பெரிஸின் வடக்கு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள லா கோர்னூவ் என்ற இடத்துக்கு சென்று, ஒரு போட்டி குழுவின் வாகனத்தை அடித்து நொறுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதன்படி, தாக்குதல் நடத்தப்பட்ட போது, பிரசன்னா நல்லலிங்கம் குறித்த இடத்துக்கு சென்ற வாகனத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு சென்ற பிரான்ஸ் அதிகாரிகளால், பாதிக்கப்பட்ட இருவர் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மீட்டகப்பட்டனர்.
இந்தநிலையில், பிரசன்னா நல்லலிங்கம், 2022 மே மாதத்தில் டொராண்டோவில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சில வாரங்களுக்குள், நிலுவையில் உள்ள கைது ஆணையின்படி, அவரை நாடு கடத்த பிரான்ஸ், கனடாவிடம் கோரிக்கையை விடுத்தது.
இதேவேளை, பிரசன்னா நல்லலிங்கத்தின் சட்டத்தரணிகள், தங்கள் கட்சிக்காரர், வாகனத்தை நொறுக்க 'AAVA' உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியதை ஒப்புக்கொண்டனர்.
இந்தநிலையில், வன்முறை வரலாறு மற்றும் நீண்ட குற்றப் பதிவைக் கருத்தில் கொண்டு, நல்லலிங்கம் தனது போட்டியாளர்களுக்கு தீங்கு விளைவிக்க திட்டமிட்டிருந்தார் என்று ஊகிப்பது நியாயமானது என்று பிரான்ஸ் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் வாதிட்டனர்.
முன்னதாக, 2016ஆம் ஆண்டு சிவகுமாரன் ஜீவரத்னா என்பவரின் கொலை தொடர்பாக இலங்கையில் பிரசன்னா நல்லலிங்கம் தேடப்படுவதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
மேன்முறையீடு
குறித்த சம்பவத்துக்கு பின்னர், அவர் நாட்டை விட்டு பிரான்ஸுக்கு தப்பிச் சென்றதாக இலங்கை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
டிசம்பர் 2022இல், கியூபெக்கில் உள்ள ரோக்ஸாம் வீதியில் உள்ள அங்கீகரிக்கப்படாத சோதனைச் சாவடிக்கு ஊடாக, பிரசன்னா நல்லலிங்கம் அமெரிக்காவிலிருந்து ஒரு மோசடிப் பெயரைப் பயன்படுத்தி கனடாவுக்குள் நுழைந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.
எனினும், நல்லலிங்கம் எப்படி அல்லது எப்போது அமெரிக்காவிற்குள் நுழைந்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இதற்கிடையில், கனடாவில் ஏனைய வழக்குகளை போலவே, பிரசன்னா நல்லலிங்கத்தை நாடுகடத்துவது குறித்த இறுதி முடிவு மத்திய நீதி அமைச்சரிடமே உள்ளது, இந்த முடிவை ஒன்ராறியோவின் உயர் நீதிமன்றத்திலும் மேன்முறையீடு செய்யலாம்.
இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்றம் நாடுகடத்தல் செயல்முறை குறித்து இறுதி முடிவை எடுக்கும் வரை ஒருவரை கனேடிய அரசாங்கத்தினால் நாடுகடத்த முடியாது.
எனவே, பிரசன்னா நல்லலிங்கத்தின் சட்டத்தரணிகள், நீதியமைச்சரிடம் சமர்ப்பிப்புகளைச் செய்து, பிரான்ஸிடம் அவர் சரணடைவதைத் தடுக்கும் வழிகளைத் தொடர விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

நிலாவை காப்பாற்ற சென்ற சோழன் அப்பாவிற்கு ஏற்பட்ட சோகம்.. அய்யனார் துணை அடுத்த வார பரபரப்பு புரொமோ Cineulagam

அடுத்த வாரம் கண்டிப்பாக சம்பவம் இருக்கு, முத்துவிடம் சிக்கிய ரோஹினி.. சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
