நேட்டோ தளத்தில் உளவு! சீன வம்சாவளி கனடா பெண் கைது
பெல்ஜியத்தில் உள்ள நேட்டோ தளத்தில் பயிற்சிப் பணியாளராக பணியாற்றிய சீன வம்சாவளியைச் சேர்ந்த கனடா நாட்டுப் பெண் ஒருவர் உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பெல்ஜியம் அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
மூன்றாம் நாடு ஒன்றிற்காக உளவு பார்த்ததாகவும், குற்றவியல் அமைப்பு ஒன்றில் உறுப்பினராக இருந்ததாகவும் அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளதாக அரசு வழக்கறிஞர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
எமது கடவுச்சீட்டிற்குப் பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது! ஒரு நாடாக நாம் முன்னோக்கி வருகிறோம் - அமைச்சர் நளிந்த
கைது செய்யப்பட்டப் பெண்
இருப்பினும், கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் தற்போது வெளிவிடப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள 'ஷேப்' எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் அந்தப் பெண் பயிற்சிப் பணியாளராக பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri