காதலியை காப்பாற்ற ஹமாஸ் படைகளிடம் சிக்கிய கனேடியர்: தாயார் வெளியிட்ட உருக்கமான பதிவு
இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட ஐந்தாவது நபர் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி செய்யப்பட்ட இளைஞரின் மரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஹமாஸ் படைகள் முன்னெடுத்த தாக்குதலின் போது காதலியை காப்பாற்றுவதற்காக குறித்த கனேடிய இளைஞர் உயிரை இழந்துள்ளார்.
இளைஞரின் மரணம்
சம்பவத்தின் போது 21 வயதான Netta Epstein மற்றும் அவரது காதலி ஆகிய இருவரும் Kfar Aza, kibbutz பகுதியில் பாதுகாப்பான அறை ஒன்றில் தங்கியிருந்துள்ளனர்.
அப்போதே ஹமாஸ் துப்பாக்கிதாரி ஒருவர் அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளார். அந்த ஹமாஸ் ஆயுததாரி இவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளதுடன் கையெறி குண்டு ஒன்றை இவர்கள் மீது வீசியுள்ளார்.
ஆனால் Netta Epstein, அந்த தாக்குதலில் இருந்து தமது காதலியை காப்பாற்றும் நோக்கில், அந்த கையெறி குண்டை தமது உடம்பில் வாங்கியுள்ளார். இதில் Irene Shavit என்ற அந்த இளம்பெண் உயிர் தப்பியதுடன், பின்னர் மீட்கப்பட்டுள்ளார்.
தாக்குதல்
இந்நிலையில் Netta Epstein இன் தாயார், அங்குள்ள மக்கள் மீது ஹமாஸ் முன்னெடுத்துள்ள தாக்குதல் என்பது உண்மையில் படுகொலை என குறிப்பிட்டுள்ளார்.
அக்டோபர் 7ம் திகதி தாமும் சம்பவ இடத்தில் இருந்ததாகவும், ஆனால் இன்னொரு பகுதியில் ஒழிந்துகொண்டு தப்பியதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் kibbutz பகுதியில் அன்றைய தினம் கொல்லப்பட்ட 70 பேர்களில் தமது தாயாரும், மகனும், இரு உறவினர்களும் சிக்கிக்கொண்டனர் எனவும் உறவினர் ஒருவர் மாயமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த இளைஞன் இஸ்ரேலில் பிறந்தாலும், அவரது பாட்டி காரணமாக கனேடிய குடியுரிமையும் பெற்றுள்ளார். மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் வரையில் Netta Epstein இஸ்ரேல் இராணுவத்தில் சேவையாற்றியும் வந்துள்ளார்.

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
