கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த விவசாய ஆராய்ச்சியாளர் திடீரென உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில்(Jaffna), விவசாய ஆராய்ச்சி தொடர்பில் உரையாடிக்கொண்டிருந்த ஆராய்ச்சியாளர் மயங்கி விழுந்த நிலையில் இன்றையதினம்(25) உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் - கட்டைப்பிராய் பகுதியைச் சேர்ந்த பொன்னுத்துரை ரவிச்சந்திரநேசன்(வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யாழில் உயிரிழப்பு
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் கனடா(Canada) பல்கலைக்கழகத்தில் ஒரு விவசாய ஆராய்ச்சியாளராக உள்ள நிலையில், கடந்த 13ஆம் திகதி இவர் கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ளார்.

அந்தவகையில் நேற்று நள்ளிரவு பல்கலைக்கழக விரிவுரையாளருடன் ஜும்(Zoom) தொழில்நுட்பமூடாக ஆராய்ச்சி குறித்து கலந்துரையாடிக் கொண்டிருந்த போது, திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இந்நிலையில், அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரணம் விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam