ஒரு வருடமாக மூடப்பட்டுள்ள கனடா - அமெரிக்காவிற்கு இடையிலான எல்லை! பயணத் தடை மீண்டும் நீடிப்பு
கோவிட் - 19 தொற்று பரவல் அச்சம் காரணமாக அமெரிக்காவிற்கும், கனடாவிற்கும் இடையில் தேவையற்ற பயணங்களுக்கான தடையானது எதிர்வரும் மார்ச் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கனடா, அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ நாடுகளுக்கு இடையிலான தேவையற்ற பயணங்களுக்கான தடையானது பெப்ரவரி 21ஆம் திகதி வரை ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மேலும் ஒரு மாதத்திற்கு குறித்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. 11ஆவது முறை தடை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையிலான எல்லை மூடப்பட்டு முழுதாக ஒரு வருடம் ஆகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்ற போதும் அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையேயான வர்த்தகம் போன்ற அனைத்து அத்தியாவசிய பயணங்களும் வழக்கம் போல் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், கனடா கடந்த பிப்ரவரி 15ஆம் திகதி முதல் அனைத்து பயணிகளுக்கும் புதிய, கடுமையான சோதனை மற்றும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மகேஷ் பாபுவின் வாரணாசி பட நிகழ்ச்சியில் பாட ஸ்ருதிஹாசன் வாங்கிய சம்பளம்... இத்தனை கோடியா? Cineulagam