கனடாவில் 'PR' பெறுவதற்கான முக்கிய ஆவணங்கள்..!
கனடாவில் தற்காலிக வசிப்பிட உரிமையிலிருந்து நிரந்தர வசிப்பிட உரிமைக்கு (TR to PR) விண்ணப்பிக்க முன்னர் விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களை முன்கூட்டியே தயாரிக்க வேண்டும்.
2021ஆம் ஆண்டில், ஒரே நாளில் நிரப்பப்பட்ட குறித்த 'TR to PR' திட்ட வாய்ப்பை, மொழித் தேர்வு முடிவுகள் அல்லது பொலிஸ் சான்றிதழ்கள் இல்லததால் பலர் தவற விட்டனர்.
இந்த முறை, முன்கூட்டியே முக்கிய ஆவணங்களை தயார் செய்துகொள்வது நிரந்தர வசிப்பிட உரிமையை பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.
பொலிஸ் சான்றிதழ்கள்
மொழித் தேர்வு முடிவுகள், பொலிஸ் சான்றிதழ்கள், கல்விச் சான்றுகள், பயண வரலாறு, வேலைவாய்ப்பு கடிதங்கள், அடையாள ஆவணங்கள் மற்றும் மொழிபெயர்ப்புகள் ஆகியவை முக்கிய ஆவணங்களாகும்.
பொலிஸ் சான்றிதழ்கள் மற்றும் கல்விச் சான்றிதழ்கள் போன்ற சில ஆவணங்களைப் பெற பல மாதங்கள் ஆகலாம். மொழித் தேர்வுச் சான்றிதழ்களை, IRCCஆல் அங்கீகரிக்கப்பட்ட வழங்குநரிடம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளில் நீங்கள் ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேல் வாழ்ந்த ஒவ்வொரு நாட்டிற்குமான பொலிஸ் சான்றிதழ்கள் தேவை. இதேவேளை, விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கான ஆவணங்களையும் சேகரிக்க வேண்டும்.
அதாவது, கடவுச்சீட்டு, பிறப்புச் சான்றிதழ்கள், பயண வரலாறு மற்றும் காசோலைகள், கனடாவிற்குள் இருந்து விண்ணப்பிக்கும் வேலை அல்லது கல்வி அனுமதி ஆகியவையே அவையாகும்.
வாய்ப்பு
அத்துடன், இந்த செயன்முறையின் போது, ஏதாவது விடுபட்டிருந்தால் அல்லது தெளிவாகத் தெரியவில்லை என்றால், நீங்கள் விளக்கக் கடிதத்தைச் சேர்க்க வேண்டியிருக்கும்.
விண்ணப்பிக்க ஆவணங்களை ஸ்கேன் செய்து தெளிவாக லேபள் செய்ய வேண்டும். இதன்போது, செல்லுபடியாகும் திகதியை சரிபார்க்க வேண்டும்.

அத்துடன், தொழில் வழங்குனரின் பரிந்துரை கடிதங்களை தயார் செய்வதோடு மொழிபெயர்ப்பு விதிகளையும் பின்பற்ற வேண்டும்.
மேலும், உங்கள் கடவுச்சீட்டு காலாவதியாகவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த ஆவணங்களை முன்கூட்டியே தயாரிப்பது, உங்கள் விண்ணப்பத்தை விரைவாக சமர்ப்பிக்கவும் வாய்ப்பை தவறவிடுவதை தவிர்க்கவும் உதவும்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri