கனேடியர்களுக்காக அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விசா திட்டம்
அமெரிக்காவில்(USA) சுற்றுலாவை மேம்படுத்த கனேடியர்களுக்கான(Canada) புதிய விசா திட்டமொன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சுற்றுலா மற்றும் ரியல்எஸ்டேட் சந்தையை தூண்டும் நோக்கில், “Canadian Snowbird Visa Act” என்ற புதிய சட்டமே இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய சட்டம்
இரு கட்சிகளின் ஆதரவுடன் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஃபுளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் எலீஸ் ஸ்டெஃபானிக், லாரல் லீ மற்றும் அரிசோனாவின் கிரெக் ஸ்டான்டன் ஆகியோர் இந்த சட்டத்தை முன்வைத்துள்ளனர்.
அமெரிக்காவில் சொத்து வைத்திருக்கும் 50 வயதுக்கு மேற்பட்ட கனேடியர்களுக்கு நீண்ட காலம் தங்கி இருக்க இந்த சட்டம் அனுமதிக்கின்றது.
தற்போதுள்ள, இத்தகைய ‘Snowbird’ சுற்றுலாப் பயணிகள் ஆண்டுக்கு 182 நாட்கள் மட்டுமே அமெரிக்காவில் தங்க அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த புதிய சட்டம் இந்த காலத்தைக் 240 நாட்களாக உயர்த்தும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
கனேடியர்கள் புதிய விசா
“கனேடியர்கள் அமெரிக்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் முதன்மையானவர்கள்.அவர்கள் சொத்துகள் வைத்திருக்கும் நாடுகளில் அதிக நாட்கள் தங்க அனுமதிப்பது, சுற்றுலா வளர்ச்சிக்கும், உள்ளூர் வர்த்தக வளர்ச்சிக்கும் உதவும்,” என்று ஸ்டெஃபானிக் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதில் ஒரு குறைபாடும் உள்ளது. இந்த வாக்களிக்கப்படவுள்ள சட்டத்தின் கீழ், இவர்களுக்கு அமெரிக்க பணி வாய்ப்புகள், அல்லது அரசு நலத்திட்டங்களைப் பயன்படுத்தும் உரிமைகள் கிடையாது. இவர்கள் "non-citizen tax status" தக்கவைக்கப்படுவார்கள்.
2025 முதல் காலாண்டில், அமெரிக்கா வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 7.8% குறைந்துள்ளது. 50 பில்லியன் டொலருக்கு சுற்றுலா வர்த்தக இழப்பை சந்தித்து வருகிறது, இது 2022-இல் இருந்த 3.5 பில்லியன் டொலர் அதிகபட்ச இலாபத்துடன் ஒப்பிடும் போது மிகப்பாரிய சரிவாகும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
