மகிந்த - கோட்டாபய மீது பொருளாதார தடைகளை விதிக்க ஜி7 நாடுகளை ஒன்று திரட்டும் கனடா
முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் மேலும் இரு இராணுவ அதிகாரிகள் மீது மேலும் பொருளாதார தடைகளை விதிக்கும் நோக்கில், G7 நாடுகளை ஒன்று திரட்டுவதற்கு கனடா செயற்பட்டு வருவதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார்.
அண்மையில், இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தி முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட நால்வர் மீது கனடா தடைகளை விதித்துள்ளது.
ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
கேள்வி – "ஜனவரி 10 அன்று நான்கு இலங்கையர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடைகளுக்கான காரணம் மற்றும் காலக்கெடு குறித்து இன்னும் தெளிவான யோசனை இல்லை.
பதில் - நாங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இது சம்பந்தமாக நடவடிக்கைகளை எடுத்தோம், மேலும் நீதியை நடைமுறைப்படுத்துவதில் கவனத்துடன் இருந்தோம். கனடா எப்போதும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காகச் செயல்படுகிறது.
மேலும், கனடா பல வருடங்களாக சர்வதேச ரீதியில் பொறுப்புக்கூறலை கேள்விக்குள்ளாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதனால் தான் ராஜபக்ச சகோதரர்கள் மற்றும் மற்றவர்கள் மீது கடுமையான தடைகளை விதிக்க முடிவு செய்துள்ளோம்.
“இதன் மூலம், கனடாவில் உள்ள அவர்களது சொத்துக்கள் தடை செய்யப்படும், மேலும் அவர்கள் கனடாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜி7 நாடுகளை ஊக்குவிப்பதே எங்கள் நோக்கம்.
கேள்வி – “இலங்கையின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை விட, உக்ரைன் போன்ற நாடுகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பாடுபடுவதன் மூலம் G7 நாடுகளின் உறுப்பினர்கள் அதிக நன்மைகளைப் பெற்றுள்ளனர். இந்த பிரச்சினையில் G7 உறுப்பினர்களை ஈடுபடுத்துவது தாக்கத்தை ஏற்படுத்துமா?
பதில் – “அதுதான் எனது இலக்கு. நான் அவர்களின் கவனத்தை ஈர்க்கிறேன். இலங்கையில் உள்ள தமிழ் சமூகம் இது தான் பிரச்சனை என்று தெரியும். சமாதானத்தை அடைய, உண்மையைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்பதை அவர்கள் அறிவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri

11வது வருட திருமண நாள், மிர்ச்சி செந்தில் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ... வாழ்த்தும் ரசிகர்கள் Cineulagam
