சர்வதேச மாணவர்களுக்கான அனுமதி! கனேடிய அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு
சர்வதே மாணவர்களுக்கான அனுமதியை கடந்த ஆண்டை விட மேலும் 10 சதவீதம் கனடா(Canada) அரசு குறைத்துள்ளது.
கனடா நாட்டின் சமூக மற்றும் பொருளாதார கட்டமைப்பு வளர்ச்சியில் சர்வதேச மாணவர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.
இந்தவகையில், சில கல்வி நிறுவனங்கள் அதிகளவு சர்வதேச மாணவர்களை அனுமதித்து வருவதால் அந்நாட்டு அரசுக்கு புதிய சவால் ஏற்பட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டு மாணவர்களுக்கு தங்குமிடம் மற்றும் மருத்துவ பிரச்சனைகள் உருவாகியுள்ளது.
புதிய கட்டுப்பாடுகள்
இந்த பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கு வெளிநாட்டு மாணவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் என கனடா அரசு அறிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, புதிய கட்டுப்பாடுகளை கனடா அரசு அறிவித்துள்ளது.
இதன்படி, வெளிநாட்டு மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவார்கள்.
சில குறிப்பிட்ட பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு வேலை செய்வதற்கு வழங்கப்படும் விசாக்களை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ள கனடா அரசு, 2024இல் 4,37,000 மாணவர்களுக்கு மட்டுமே விசா வழங்கப்படும் எனக் கூறியது. இது 2023ல் 6,50,000ஆக இருந்தது.
இந்தநிலையில், 2024ஆம் ஆண்டில் சர்வதேச மாணவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட விசா அளவில், இந்த ஆண்டு மேலும் 10 சதவீதம் குறைப்பதாக கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |