இலங்கை குடும்பத்திற்கு புகலிடம் வழங்கிய கனடா
இலங்கை குடும்பம் ஒன்றுக்கு கனடாவில் புகலிடம் வழங்கப்பட்டுள்ளது. கனடாவில் அரசியல் தஞ்சம் கோரிய இலங்கை குடும்பம் ஒன்றுக்கு புகலிடம் வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பின் முன்னாள் அதிகாரி எட்வேர்ட் ஸ்னோவ்டனிற்கு (Edward Snowden) ஹொங்கொங்கில் தங்கள் சிறிய குடியிருப்பில் அடைக்கலம் வழங்கிய இலங்கை குடும்பத்திற்கே புகலிடம் வழங்கியுள்ளது.
அமெரிக்காவின் இரகசிய ஆவணங்களை அம்பலப்படுத்திய பின்னர் ஸ்னோவ்டன் தலைமறைவாகயிருந்த வேளை அவருக்கு அடைக்கலம் வழங்கிய இலங்கையை சேர்ந்த தம்பதியினருக்கும் அவர்களது இரண்டு பிள்ளைகளிற்கும் கனடா அரசியல் தஞ்சம் வழங்கியுள்ளது.
ஹொங்கொங்கில் தங்கள் ஆரம்பகட்ட அடைக்கல கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து இவர்கள் நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்கொண்டிருந்தனர்.
அதேவேளை ஸ்னோவ்டனிற்கு அடைக்கலம் கொடுத்த மற்றுமொரு இலங்கையரான அஜித்புஸ்பகுமார என்பவர் இன்னமும் ஹொங்கொங்கிலேயே தங்கியுள்ளார், அவர் இன்னமும் ஆபத்தான நிலையில் உள்ளதாக அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
அவரது புகலிடக்கோரிக்கையை பரிசீலிப்பதை கனேடிய அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும் என அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.