பதவி விலகிய கனேடிய பிரதமர்
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரதமர் மற்றும் கட்சித் தலைமைப் பதவி ஆகியவற்றில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கட்சியின் புதிய தலைவர் தெரிவு செய்யும் வரையில், தாம் பிரதமர் பதவியில் நீடிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான ரிடேயூ கொட்டேஜில் கட்சித் தலைமைப் பதவியிலிருந்து விலகும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
ஜஸ்ரின் ட்ரூடோ
பிரதமர் ட்ரூடோ இன்றைய தினம் ஆளுனர் நாயகத்தையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றை ஒத்தி வைப்பது குறித்து அவர் கலந்துரையாடியுள்ளார்.
இதேவேளை, கனடிய நாடாளுமன்றம் எதிர்வரும் மார்ச் மாதம் 24ம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜஸ்ரின் ட்ரூடோ லிபரல் கட்சியின் தலைவராக 11 ஆண்டுகள் கடயைமாற்றியுள்ளதுடன், 9 ஆண்டுகள் நாட்டின் பிரதமராக கடமையாற்றிள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த பத்தாண்டு காலமாக தாம் நாட்டுக்காக போராடியதாகத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 17 மணி நேரம் முன்
தன்னைப்போல் வெளியே அனுப்பப்பட்ட மீனா, நக்கலாக ரோஹினி சொன்ன விஷயம்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri