கனடா பொலிஸாரின் அதிரடி : சிக்கிய பெருந்தொகையான போதைப்பொருள்
கனடாவின் வின்ட்சர் நகரில் நடைபெற்ற விசேட சோதனை நடவடிக்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவிலான ஃபெண்டானைல்( fentanyl ) போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தெற்கு ஒன்டாரியோ பகுதியில் உள்ள பல வாகனங்களில் கடந்த செப்டெம்பர் மாத இறுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 46 கிலோகிராம் ஃபெண்டானைல் மருந்துகள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதிப்பு சுமார் 6.5 மில்லியன் கனேடிய டொலர்கள்
கைப்பற்றப்பட்ட பெண்டனில், சுமார் 460,000 street-level மருந்துகளுக்கு சமமானது எனவும், இது ஒரு மிதமான அளவிலான மக்களின் உயிரை பறிக்கும் திறன் கொண்டது எனவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இச்சம்பவத்தில் வின்ட்சர் நகரத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவரும், வாங்கூவர் நகரத்தைச் சேர்ந்த 29 வயது இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் இருவரும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் எனவும் கைது செய்யப்பட்ட இருவரும் எதிர்வரும் டிசம்பர் 8 ஆம் திகதி வின்ட்சர் நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த தேடுதல் நடவடிக்கையின் போது ஃபெண்டானைல் தவிர கொகையின், ஹெரோயின், துப்பாக்கிகள், பணம், தொலைபேசிகள், நகைகள் மற்றும் பிற போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதன் மதிப்பு சுமார் 6.5 மில்லியன் கனேடிய டொலர்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |