கனடாவில் நிரந்தர குடியிருப்பாளர் அந்தஸ்து பெற்ற புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியான செய்தி
கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டினர் இராணுவத்தில் சேரலாம் என்று அந்த நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது.
கனேடிய ஆயுதப்படை (CAF) அறிவிப்பு
கனேடிய இராணுவத்தில் குறைந்த ஆட்சேர்ப்பு நிலைகள் காரணமாக நிரந்தர குடியிருப்பாளர் அந்தஸ்து பெற்ற புலம்பெயர்ந்தோர் விரைவில் சேர்க்கப்படுவார்கள் என்று கனேடிய ஆயுதப் படை (CAF) அறிவித்துள்ளது.
இந்த ஆண்டில் சுமார் 6 ஆயிரம் உறுப்பினர்களை புதிதாக சேர்க்க இலக்கு வைக்கப்பட்ட நிலையில், அதில் பாதி பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனடாவில் 10 ஆண்டுகளாக வசிக்கும் நிரந்தர குடியிருப்பாளர்கள் கனேடிய ஆயுதப் படைக்கு விண்ணப்பிக்க அனுமதிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Royal Canadian Mounted Police (RCMP) "காலாவதியான ஆட்சேர்ப்பு செயல்முறையை" மாற்றுவதாக அறிவித்ததை அடுத்து இந்த நடவடிக்கை வந்துள்ளது.
சமீபத்திய நடவடிக்கை ஆட்சேர்ப்பை அதிகரிப்பதற்காக எடுக்கப்பட்டதா என்று CAF கூறவில்லை என்றாலும், கனடாவின் ராயல் மிலிட்டரி கல்லூரியின் பேராசிரியரான கிறிஸ்டியன் லியூப்ரெக்ட் இது நல்ல அர்த்தமுள்ள முடிவு என கூறினார்.
கனடாவில் நிரந்தர குடியுரிமை
இந்த நிலையில் கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டினர் இராணுவத்தில் சேரலாம் என அந்த நாட்டின் இராணுவம் அறிவித்துள்ளது.
தற்போது கனடா நாட்டின் குடிமக்களை போலவே 18 வயதுக்கு மேற்பட்ட நிரந்தர குடியிருப்பாளர்கள் இராணுவத்தில் எளிதில் சேரலாம். அதேபோல் 16 வயது நிரம்பியவர்கள் பெற்றோரின் சம்மதத்துடன் இராணுவத்தில் இணையலாம்.
இராணுவத்தில் அதிகாரியாகும் எண்ணம் இருந்தால் அதற்குரிய கல்வி தகுதியை பெற்றிருக்க வேண்டும். கனடா இராணுவத்தின் இந்த அறிவிப்பால் இந்தியர்கள் அதிகளவில் பயன்பெறுவார்கள் என நம்பப்படுகின்றது.
ஏனெனில் கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களில் இந்தியர்கள் முதல் இடத்தில் உள்ளனர். கனடாவுக்கு வரும் 5 வெளிநாட்டவர்களில் ஒருவர் இந்தியர் என புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
