புலம்பெயர்தல் அனுமதிகள் தொடர்பில் கனடா வெளியிட்டுள்ள தகவல்
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவரும் நிலையில், கனடா தற்காலிக குடியிருப்பு அனுமதிகளில் மாற்றம் செய்ய திட்டமிட்டுவருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா போன்ற நாடுகள், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன.
அவ்வகையில், கனடாவின் வீடமைப்புத்துறை, கட்டமைப்பு மற்றும் சமூகங்கள் துறை அமைச்சரான சீஹன் ஃப்ரேசர் இந்த விடயம் தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச மாணவர்களுக்கான ஆதரவு
முன்னர் புலம்பெயர்தல்துறை அமைச்சராக இருந்தபோது சீஹன் ஃப்ரேசர் சர்வதேச மாணவர்களுக்கு ஆதரவாக கருத்துக்களை முன்வைத்து வந்ததாகவும், பின்னர் வீடமைப்புத்துறை அமைச்சராக பதவி ஏற்றதும் வீடுகள் பற்றாக்குறைக்கு சர்வதேச மாணவர்கள்தான் காரணம் என குற்றம் சுமத்தியமை பெரும் சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சர்வதேச மாணவர்கள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது, கனடா வழங்கும் தற்காலிக குடியிருப்பு அனுமதிகளை மறுசீரமைப்பு செய்யவேண்டும் என சீஹன் ஃப்ரேசர் கூறியுள்ளார்.
இதன்படி தற்காலிக குடியிருப்பு அனுமதி பெற்றுள்ளவர்கள் என்னும் வகையின் கீழ் சர்வதேச மாணவர்களும், பணி விசாவில் கனடா வருபவர்களும் அடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 15 மணி நேரம் முன்

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam
