கனடாவில் சடுதியாக அதிகரித்துள்ள வீட்டு வாடகைத் தொகை
கனடாவில்(Canada) வீட்டு வாடகைத் தொகையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் வாடகைத் தொகையானது 9.3 வீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் 2023ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இவ்வாறு அதிகரித்துள்ளமையானது ஆய்வுகளின் மூலம்தெரியவந்துள்ளது.
சராசரி வாடகை
கனடாவில் ஒரு படுக்கை அறையைக் கொண்ட வீடு ஒன்றின் சராசரி வாடகை 1915 டொலர்களாக பதிவாகியுள்ளதோடு, இது கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 11.6 வீதமாக அதிகரித்துள்ளது.
இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட வீடு ஒன்றின் சராசரி வாடகைத் தொகை 22 95 டொலர்களாக பதிவாகியுள்ள நிலையில், இந்த தொகையானது கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது 11 வீதமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan
