கனடாவில் வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ள வீட்டு வாடகை
கனடாவில் மாதமொன்றுக்கான சராசரி வீட்டு வாடகை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, 2024 ஜனவரி மாதத்துக்கான சராசரி வீட்டு வாடகை 2,196 கனேடிய டொலர்களாக அதிகரித்துள்ளது .
மேலும், இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 10%ஆக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள காரணம்
அதிகபட்சமாக கனடாவின் வான்கூவர் நகரில் ஒரு படுக்கையறையை கொண்ட வீட்டிற்கான சராசரி வாடகை 2,700 கனேடிய டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ள அதேவேளை டொராண்டோ நகரில் 2,521 கனேடிய டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த இரு வருடங்களாக கனடாவில் மாதமொன்றுக்கான சராசரி வீட்டு வாடகை 22%ஆக அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கனடாவின் சனத்தொகையில் ஏற்பட்டுள்ள பாரிய அதிகரிப்பும் வீட்டுரிமையை பெறுவதற்கான இயலுமையில் ஏற்பட்டுள்ள குறைவுமே இதற்கான காரணமாக கூறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |