அமெரிக்காவின் வரி விதிப்பு கொள்கை! பதிலடி கொடுக்கும் நகர்வில் கனடா
அமெரிக்கா விதித்த வரிகளுக்கு எதிராக அந்நாட்டு வாகனங்கள் மீது 25சதவீத வரி விதிப்பதன் மூலம் கனடா பதிலடி கொடுக்கும் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு நாடுகள் மீது பரந்த அளவிலான வரிகளை அறிவித்தார்.
ஆனால் கனடா அல்லது மெக்சிகோவிற்கு புதிய வர்த்தக வரிகளைச் சேர்க்கவில்லை.
ட்ரம்பின் நடவடிக்கை
இருப்பினும், தளர்வு இருந்தபோதிலும் , அமெரிக்கா கனேடிய எஃகு, அலுமினியம் மற்றும் வாகனங்கள் மீது 25சதவீத வரிகளை விதித்துள்ளது.
இந்நிலையில், "அமெரிக்க ஜனாதிபதியின் நடவடிக்கைகள் கனடாவிலும் உலகம் முழுவதும் எதிரொலிக்கும் , " என்று மார்க் கார்னி கூறியுள்ளார்.
பல தசாப்த கால அமெரிக்க வர்த்தகக் கொள்கையை முறியடித்து, புதிய வரிகளை கடுமையாக்குவதாக ட்ரம்ப் அறிவித்தார்.
அமெரிக்க வர்த்தகக் கொள்கை
இந்நிலையில், அமெரிக்க வர்த்தகக் கொள்கைக்கு பதிலளிக்கும் விதமாக, கண்டத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு இணங்காத வாகனங்களுக்கு தனது அரசாங்கம் வரிகளை விதிக்கும் என்று கார்னி கூறியுள்ளார்.
ட்ரம்பின் அறிவிப்பால் உலகப் பொருளாதாரம் கொந்தளிப்பில் இருக்கும் பின்னணியில் கார்னியின் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.
பல நாடுகள் அமெரிக்காவுடன் ஒரு புதிய - மற்றும் மோசமான - வர்த்தக உறவை அடைந்து கொள்வதால், சந்தைகளில் இருந்து ட்ரில்லியன் கணக்கான டொலர்கள் அழிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார ஆர்வளர்கள் விளக்கமளித்துள்ளனர்.
அமெரிக்காவில் நடைபெற்ற உலகளாவிய வரிகள் வெளியீட்டில் கனடா "மோசமான ஒப்பந்தத்தில் சிறந்ததைப் பெற்றது" என்று உலக தலைவர்களிடையே ஒருமித்த கருத்து இருப்பதாகவும், ஆனால் கனேடியப் பொருட்கள் மீதான தற்போதைய வரிகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
