கனேடிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடாவின் கல்கரி பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் கடுமையான வெப்பநிலை நிலவும் எனவும் இது தொடர்பில் மக்கள் கூடுதல் அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கனேடிய சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பகல் நேரத்தில் முப்பது பாகை செல்சியஸ்சை விடவும் அதிகமான வெப்பநிலை நீடிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு இந்த வெப்பநிலை அதிகரிப்பு காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புற ஊதா கதிர்களின் வீழ்ச்சி

எச்சரிக்கை விடுக்கப்படும் பிராந்தியங்களில் வாழ்வோர், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் சுகாதார நிலை குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக வெப்பநிலை காரணமாக நோய்வாய்ப்படக்கூடியவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த பிரதேச மக்கள் திறந்தவெளியில் இருப்பதனை தவிர்த்து அதிக அளவு நீரை பருகுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறுவர்கள் மற்றும் செல்லப்பிராணிகளை வாகனங்களில் தனித்து விட்டு நீண்ட நேரத்திற்கு வெளியே செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு, எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு புற ஊதா கதிர்களின் வீழ்ச்சி அளவும் அதிகமாக காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri