மீண்டுமொரு விமான விபத்து! பரபரப்பான காணொளி வெளியானது
தென்கொரிய விமான விபத்து ஏற்பட்டு சில மணிநேரங்களில் கனடாவில் ஹாலிஃபாக்ஸில் தரையிறங்கிய ஏர் கனடா விமானத்தில் தீப்பிடித்துள்ளது.
இதன்போது, பயணிகள் அதிகளவு பதற்றமடைந்துள்ள நிலையில் விமானத்திற்குள் இருந்து ஒருவர் பதிவு செய்த காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
முடப்பட்ட விமான நிலையம்
சம்பவத்தை தொடர்ந்து ஹாலிஃபாக்ஸ் ஸ்டான்ஃபீல்ட் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
It is too scary. Came across the footage of a Air Canada flight landing with a broken landing gear resulting in the wing scraping the runway causing a fire.
— Neetu Khandelwal (@T_Investor_) December 29, 2024
Only minor injuries reported. Airport closed temporary. pic.twitter.com/QIEK4mi817
பிஏஎல் ஏர்லைன்ஸால் இயக்கப்படும் ஏர் கனடா விமானம் 2259, நியூஃபவுண்ட்லேண்டின் செயிண்ட் ஜோன்ஸிலிருந்து வந்துள்ளது.
இதன்போது, தரையிறங்கும் கியரில் ஏற்பட்ட ஒரு கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் அது விமானத்தின் ஒரு பகுதி முழுவதற்கும் பரவியது.
ஆரம்ப அறிக்கைகளின்படி, விமானத்தின் டயர்களில் ஒன்று சரியாக இயங்கத் தவறியதால் ஏற்பட்ட சமநிலையின்மை காரணமாக விமானத்தின் இறக்கை ஓடுபாதையில் உரசி தீப்பிடித்துள்ளது.
எனினும் அவசரகால மீட்புக் குழுக்களால்,அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
மேலதிக தகவல் - இந்திரஜித்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |