இலங்கைக்கு 1.3 மில்லியன் டொலர்களை கடனாக வழங்கும் கனேடிய அரசாங்கம்
கனேடிய அரசாங்கம், கொரோனா தடுப்பு உடனடி உதவியின் அடிப்படையில் உலக சுகாதார நிறுவனத்தின் ஊடாக 1.3 மில்லியன் டொலா்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
ஏற்கனவே இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து, கொரோனா பாதிப்பு மற்றும் மீட்புக்காக 10 நாடுகளுக்கு ஆதரவளிக்க கனேடிய அரசாங்கம் 23.86 மில்லியன் டொலா்களை உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது.
இந்தநிலையில் தற்போது இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள 1.3 மில்லியன் டொலா்கள், ஒக்ஸிஜன் சிகிச்சை மற்றும் பிற முக்கியமான உபகரணங்கள் கொள்வனவுக்காக பயன்படுத்தப்படவுள்ளன.
இது தொடா்பில் கருத்துரைத்துள்ள கனேடிய உயா்ஸ்தானிகா் டேவிட் மெக்கினன், கொரோனாவுக்கு எதிரான செயல் திட்டங்களுக்காக உாிய நேரத்தில் கனடா நிதியை இலங்கைக்கு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளாா்.



