தமிழ் இனப்படுகொலையை ஒருபோதும் மறக்கக்கூடாது: கனடாவின் கன்சர்வேடிவ் தலைவர் அறிக்கை
தமிழ் இனப்படுகொலையை ஒருபோதும் மறக்கக்கூடாது என கனடாவின் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லீவ்ரே தெரிவித்துள்ளார்.
கருப்பு ஜூலையின் 42ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும்,
இலங்கையின் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் குழந்தைகள் உட்பட பல தமிழ் மக்களின் எச்சங்கள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.
நீதிக்காக குரல்
இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது செய்யப்பட்ட அட்டூழியங்களின் ஒரு சிலிர்க்க வைக்கும் நினைவூட்டலாக இந்த கண்டுபிடிப்புக்கள் உள்ளன.
தமிழ் இனப்படுகொலையை ஒருபோதும் மறக்கக்கூடாது என்பதோடு தமிழ் கனடியர்களுடன் ஒற்றுமையை வலியுறுத்தி நீதிக்காக குரல் கொடுப்போம்.
எனது தலைமையில் உள்ள கன்சர்வேடிவ் கட்சி, எப்போதும் தமிழ் இனப் படுகொலையை அங்கீகரிக்கும் - என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





படப்பிடிப்பில் கொண்டாட்டத்தில் இறங்கிய கார்த்திகை தீபம் சீரியல் பிரபலங்கள்... என்ன ஸ்பெஷல், போட்டோஸ் இதோ Cineulagam
