கனடா - பிரித்தானியாவின் முடிவுகளால் அச்சத்தில் நாமல்! ஆபத்தில் அநுர அரசு
இலங்கை அரசால் நடத்தப்பட்டதாக கூறப்படும் இனப்படுகொலையால் உயிர் நீத்த தமிழ் மக்களை நினைவுகூரும் வகையில், அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நிரந்தர கட்டமைப்பாக கனடாவில் நிறுவப்பட்ட தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் காணப்படுகிறது.
இந்த நினைவுச்சின்னம் தமிழ் இனப்படுகொலை வரலாற்றின் கல்வியைக் குறிக்கும் ஒரு பெரிய புத்தக வடிவ அமைப்பைக் கொண்டுள்ளது.
இந்நிலையில் குறித்த நினைவுத்தூபி அமைக்கப்பட்டமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கடும் எதிர்ப்பை அண்மையில் வெளியிட்டிருந்தார்.
எனினும், இந்த எதிர்ப்பை எதிர்த்த கனடா தரப்புக்கள், தாங்கள் சரியான பாதையில் செல்வதாக நாமலை மேற்கோள்காட்டி எதிர்வாதங்களை திருப்பியிருந்தன.
இந்நிலையில் சர்வதேச நாடுகளில் புலம்பெயர் தமிழர்கள் அரசியல் ரீதியாக பெரும் பங்கை ஆற்றிவருகின்ற நிலையில், அதன் தாக்கங்கள் இலங்கை அரசையும் அரசியல்வாதிகளையும் எவ்வாறு பாதித்துள்ளன என்பதை விரிவாக ஆராய்கிறது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...